தர்ப்பணம் என்பது ஶ்ராத்தத்திற்கு ப்ரதிநிதியாகதான் பண்ணுகிறோம். அந்த ஶ்ராத்தத்தில் ஹோமம் என்பது பிதாவிற்குதான் பண்ணுகிறோம். மாதாவிற்கு ஹோமம் கிடையாது. அதனால் அதற்குப் பதிலாக வரும் தர்ப்பணத்திலும் பிதாதான் ப்ரதானமாக இருப்பார். மாதா என்பவர் பிதாவுடன் சேர்ந்துதான் இருப்பார். அந்த ரீதியில் மாதாவிற்குத் தனியாக தர்ப்பணம் வராது.
மாதாவிற்கு ஶ்ராத்தம் பண்ணும்போதுகூட பிதாவிற்குதான் ஹோமம். பிதா உயிரோடிருந்தால் தாத்தாவில் ஆரம்பித்துதான் பண்ணவேண்டும் என்றெல்லாம் கணக்கு உண்டு. அவையெல்லாம் அகத்து வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

