அடியேன் அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா தர்ப்பணத்தைத் தொடங்க விரும்புகிறேன். எனது உறவினர் ஒருவர் இதை மாசி மாதத்தில் மட்டும் செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் தஞ்சாவூரைச் சேர்ந்த எனது நண்பரும் ஜோதிடருமான திரு. G.K. சுவாமிநாதன் அவர்கள் மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் வரும் கிருஷ்ணபக்ஷ சப்தமி, அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்ய வேண்டும் என்கிறார். தயவுசெய்து இதைத் தெளிவுபடுத்தி, எப்படிச் செய்யவேண்டும் என்றும் விளக்க ப்ராத்திக்கின்றேன். 

ஷண்ணவதி ஶ்ராத்தம் செய்பவர்கள் 4 மாதமும் அஷ்டகா அன்வஷ்டகா ச்ராத்தம் செய்வர். மற்றவர் மாக மாதத்தில் தை அமாவாசைக்குப் பிறகுள்ள மாசி அமாவாசை வரையுள்ளதான மாக மாசத்தில் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அஷ்டகையும் அதற்கு மறுநாள் அன்வஷ்டகையும் அனுஷ்டிப்பர். இது பெரும்பாலும் தை மாதத்திலும் சில சமயம் மாசி மாதத்திலும் வரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top