இரவு ஒரு மணிக்கு மேல் ஒருவர் பரமபதித்தால், அந்த மரணம் அன்றைய நாளின் கணக்கிலா அல்லது அடுத்த நாளின் கணக்கிலா?

காலை ஆறு மணிக்கு உதயம் , மாலை ஆறு மணி அஸ்தமனம் என்றால் இரவு ஒன்றரை மணிக்குள் பரமபதித்தால் முன்னாள் கணக்கு என்றும் அதற்கு மேல் அடுத்தநாள் என்ற கணக்கு. இது சூர்யோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் பொருத்து மாறும். மார்கழி மாதம் இரவு நேரம் கூடுதலாக இருக்கும், வெய்யில் காலத்தில் இரவு நேரம் சற்றே குறைவாக இருக்கும். சில சமயம் ஆறரை மணிக்கு உதயம் ஆறரை மணிக்கு அஸ்தமனம் என்று இருக்கும். இப்படிப்பட்ட காலங்களில் பஞ்சாங்கத்தில் அகஸ் (பகல் நேரம்) என்று போட்டிருப்பார்கள். அதைத் தவிர மிச்சம் இராத்திரி நேரம். அந்த இராத்திரி நேரத்தை 8ஆகப் பிரித்துக்கொண்டு, முதல் 5 பாகம் முன்னாள் என்றும், அடுத்த 3 பாகம் பின்னாள் என்று வைத்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top