கேட்டவர்களுக்குத் தீட்டு இருக்குமானால் (ஸ்நான ப்ராப்தி இருக்குமானால்) கட்டாயம் ஸ்நானம் செய்யவேண்டும். யார் கர்த்தாவோ அவரை நேரே பார்த்து பத்து நாட்களுக்குள் துக்கம் விசாரித்தால் ஸ்நானம் செய்யவேண்டும். வெளியூரிலிருந்து தொலைபேசி வாயிலாக விசாரித்தாலும் ஸ்நானம் பண்ணுவது என்ற வழக்கமிருக்கிறது. ஒருமுறை விசாரிக்கும் போது ஸ்நானம் செய்தால் போதும், இரண்டாவது முறை பேசும்போது ஸ்நானம் தேவையில்லை. பொதுவாக காலையில் ஸ்நானம் செய்யும் முன் விசாரித்துவிட்டு பின் ஸ்நானம் பண்ணுவார்கள்.

