திருவாராதனம் தெரியாத பக்ஷத்தில் இந்த மாதிரி ஷோடஶ உபசாரங்களை ஸமர்ப்பிக்கலாம் ஆனால் முழுவதும் தெரிந்துகொண்டு செய்யவேண்டும். இது போல் செய்வதென்பது ஒரு தற்காலிகமான ஒன்றுதான். திருவாராதனம் தெரியாது என்று வாழ்நாள் முழுவதும் இதையே சொல்லிக்கொண்டு இதை மட்டுமே செய்தல் கூடாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடக்கூடாது என்பதால் ஒரு வாரத்திற்குள் திருவாராதனம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஷோடஶ உபசாரங்களெல்லாம் தற்காலிகம்தான்.

