சாளக்கிராம பெருமாளுக்குச் செய்யப்படும் திருவாராதனத்தின் முழுமையான நடைமுறை தெரியாத பக்ஷத்தில், அர்க்யம், பாத்யம், ஆசமனம், திருமஞ்சனம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், தளிகை மற்றும் ஆரத்தி ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாமா?

திருவாராதனம் தெரியாத பக்ஷத்தில் இந்த மாதிரி ஷோடஶ உபசாரங்களை ஸமர்ப்பிக்கலாம் ஆனால் முழுவதும் தெரிந்துகொண்டு செய்யவேண்டும். இது போல் செய்வதென்பது ஒரு தற்காலிகமான ஒன்றுதான். திருவாராதனம் தெரியாது என்று வாழ்நாள் முழுவதும் இதையே சொல்லிக்கொண்டு இதை மட்டுமே செய்தல் கூடாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடக்கூடாது என்பதால் ஒரு வாரத்திற்குள் திருவாராதனம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஷோடஶ உபசாரங்களெல்லாம் தற்காலிகம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top