இந்தக் கேள்வி எனது நண்பருக்காகக் கேட்கிறேன். அவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவர், வெளிநாட்டில் பிறந்தவர். அவருக்கு வெளிநாட்டிலேயே (சிங்கப்பூர்) மிகவும் தாமதமான வயதில் (17 வயது) கோவில் அர்ச்சகரால் (வைகானஸ முறைப்படி) உபநயன சம்ஸ்காரம் செய்யப்பட்டது. மேலும், அவர் ஸ்ரீமத் ஆண்டவனிடம் பஞ்சசம்ஸ்காரம் பெற்றுள்ளார். வெளிநாட்டில் உபநயனம் செய்யப்பட்டதாலும், தாமதமாகச் செய்யப்பட்டதாலும் இது செல்லுபடியாகாது என்பதால், அவர் சந்தியாவந்தனம் போன்ற நித்ய அனுஷ்டானங்களைச் செய்யலாமா? அல்லது அவர் பாகவதர்களுக்கான தர்மத்தைப் (வேதசாரமற்ற அனுஷ்டானங்கள்) பின்பற்ற வேண்டுமா? அடியேன்.”

உபநயனம் ஆகிவிட்டால் சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். வயதாகி உபநயனம் ஆகிவிட்டது என்றாலும் பரவாயில்லை கட்டாயம் சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். இதில் பார்க்கவேண்டியது அவரவரக்கென்று ஒரு ஸுத்ரம் உண்டு அவருக்கு அவரின் ஸுத்ர முறைப்படி உபநயன ஸம்ஸ்காரம் ஆனதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த ஸுத்ர முறைப்படி உபநயனம் பண்ணவேண்டும். எப்படியானாலும் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். முந்தைய சுதர்சன கேள்விகளும் பதில்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top