சூர்யனுக்கு இராமாவதாரம், சந்திரனுக்கு க்ருஷ்ணாவதாரம், செவ்வாய் க்ரஹத்திற்கு ந்ருஸிம்ஹன், புதனுக்குக் கல்கி, வியாழனுக்கு (குரு) வாமனன், சுக்ரனுக்குப் பரசுராமன், சனிக்குக் கூர்மாவதாரம், ராகுவிற்கு வராஹ அவதாரம், கேதுவிற்கு மத்ஸ்யாவதாரம் என்று அந்தந்த க்ரஹங்களுக்கு அதிதேவதையாக இந்த அவதாரமூர்திகள். கீழேயிருக்கும் ஶ்லோகம் மூலம் அறியலாம். रामावतारः सूर्यस्य चन्द्रस्य यदुनन्दनः| नृसिंहो भूमिपुत्रस्य सौम्यः सोमसुतस्य च || वामनो विबुधेन्द्रस्य भार्गवो भार्गवस्य च | कूर्मो भास्करपुत्रस्य सैंहिकेयस्य सूकरः केतोर्मीनावतारश्च ॥ ராமாவதார: ஸூர்யஸ்ய சந்த்₃ரஸ்ய யது₃நந்த₃ந:| ந்ருஸிம்ஹோ பூ₄மிபுத்ரஸ்ய ஸௌம்ய: ஸோமஸுதஸ்ய ச || வாமநோ விபு₃தே₄ந்த்₃ரஸ்ய பா₄ர்க₃வோ பா₄ர்க₃வஸ்ய ச | கூர்மோ பா₄ஸ்கரபுத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸூகர:- – கேதோர்மீநாவதாரஶ்ச ॥ முக்கிய குறிப்புகள்: நவதிருப்பதியில் இருக்கும் ஒவ்வொரு திவ்யதேச எம்பெருமாளை சேவிக்க ஒவ்வொரு க்ரஹதோஷம் போகும் என்று ஒரு ஐதிகமும் இருக்கிறது. இதை ஸ்தலபுராணமும் கூறுகிறது. திருக்குருகூர் – குரு தோஷம் நீங்க இரட்டை திருப்பதி – திருத்தொலைவில்லி மங்கலம் – ராகு கேது தோஷம் நீங்க திருப்புளிங்குடி – புதன் தோஷம் நீங்க தெந்திருப்பேரை – சுக்ர தோஷம் நீங்க ஶ்ரீவைகுண்டம் – சூர்ய தோஷம் நீங்க திருவரகுணமங்கை – சந்திர தோஷம் நீங்க திருக்குளந்தை – சனி தோஷம் நீங்க திருக்கோளூர் – மங்கள க்ரஹ(செவ்வாய்) தோஷம் நீங்க

