– வாரணமாயிரம் சேவிக்கலாம் . அதன் பலஶ்ருதியிலேயே “வாழும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே” என்று இருக்கிறது. – பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து பத்தாம் திருமொழி “வட்டநடுவே” பதிகத்தில் “எங்குட்டன்வந்துஎன்னைபுறம்புகுல்வான்” என்று ஆழ்வார் கூறியிருக்கிறார். இதைச் சேவிக்க நமக்கும் இவ்வனுபவம் வாய்க்கப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விரண்டு பதிகங்களைச் சேவித்து பலனடைந்தவர்கள் பலர். பெரியவர்கள் அனுஷ்டானத்திலும் இருக்கிறது. தனிப்பட்ட விதமாக சனி-குரு ப்ரீத்தி என்று எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. தயாஶதகம் சேவித்தாலே போதுமானது, மேலும் பாதுகா ஸஹஸ்ரம் காஞ்சன பத்ததியில் வரும் இந்த ஶ்லோகம் சேவித்தாலே அனைத்து க்ரக தோஷங்களும் நீங்கும். கநகருசிரா காவ்யாக்₂யாதா ஶநைஶ்சரணோசிதா ஶ்ரிதகு₃ருபு₃தா₄ பா₄ஸ்வத்₃ரூபா த்₃விஜாதி₄பஸேவிதா । விஹிதவிப₄வா நித்யம் விஷ்ணோ: பதே₃ மணிபாது₃கே ! த்வமஸி மஹதீ விஶ்வேஷாம் ந: ஶுபா₄ க்₃ரஹமண்ட₃லீ ॥ (749) மேலும், சந்தான ப்ராப்திக்கு ஸ்வாமி தேஶிகனின் கோபால விம்ஶதியும், க்ரக தோஷங்கள் நீங்க ஸ்வாமி தேஶிகனின் தஶாவதார ஸ்தோத்ரமும் சேவிக்கலாம். குருவிற்கு வாமனவதார ஸ்தோத்ரமும்,சனிக்குக் கூர்மாவதார ஸ்தோத்ரமும் சேவிக்கலாம். ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் தங்கள் சந்தேகங்களை, கீழே உள்ள Formல் பதிவுசெய்து அனுப்பினால் வரும் மாதங்களில் GSPKயின் வித்வான்கள் பதிலளிப்பர். இங்கே உள்ள QR Codeஐ Scan செய்தும் ASK IN SUDARSANAM Formல் கேள்விகளை பதியலாம். முந்தைய இதழ்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளும் அதன் விடைகளையும் அறிய மேலும் தங்களின் கேள்விகளின் விடையை அறிய, கீழே உள்ள “ஸுதர்ஶநம்” (sudarsanam) என்ற Telegram Channelல் இணையவும். சம்ப்ரதாய விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எங்களின் இதர Telegram Channelகளில் சேர்ந்து பயன்பெறவும். தாஸன் Dhanyavada: Please subscribe to our channels by clicking the logos!

