ஶ்ரீ சூர்ண ப்ரதிஷ்டை என்று ஒன்று உண்டு. க்ரஹங்களிலேயே மஞ்சள் வைத்து ஶ்ரீ சூர்ணம் தயார் பண்ணி, பின் ஶ்ரீ சூக்தம் போன்ற மந்திரங்களைச் சொல்லி, பெருமாள் ப்ரதிஷ்டைப் போல் அதை ப்ரதிஷ்டை செய்வார்கள். அதை வைதிகர்கள் இட்டுக்கொள்வார்கள். அந்த ஶ்ரீசூர்ணத்தைத் தீட்டுக் காலத்தில் இட்டுக்கொள்ளக் கூடாது, இப்போது பெரும்பாலான இடத்தில் அவ்வழக்கமில்லை.

