நான் கடலில் செல்லும் கப்பல்களில் பணிபுரிகிறேன். இதுவரை கப்பலில் (கடலில்) இருக்கும் போது வழக்கமாக ஸந்த்யாவந்தனம் செய்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அவ்வாறு செய்யக் கூடாது என்று என்னிடம் கூறப்பட்டது. வைதிக ஶாஸ்த்ரப்படி கடலில் இருக்கும் போது ஸந்த்யாவந்தனம் செய்ய அனுமதி உண்டா அல்லது அதைத் தவிர்க்க வேண்டுமா?

சந்த்யாவந்தன ஜபங்களெல்லாம் தரையிலே நின்று கொண்டோ, அமர்ந்து கொண்டோ செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கப்பலில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தளவு பார்த்துக்கொள்வது. அதற்காக சந்த்யாவந்தனத்தை விட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top