அடியேனின் தம்பி நாராயணன் 17.7.23 அன்று காலை 6 மணிக்குள் பரமபதித்து விட்டான். அன்று மதியம் தான் ஆடி மாதப் பிறப்பு. நாள் முழுவதும் ஸர்வ அமாவாசை. அவனுக்கு அடுத்தடுத்த வருடங்களில் ஶ்ராத்தம் ஆனி அமாவாசையா அல்லது ஆடி அமாவாசையன்று பண்ண வேண்டுமா? 3 வருடங்களாக ஆனி அமாவாசையன்றே பண்ணியாகி விட்டது. தற்போது குடும்பத்தில் ஒருவர் ஆடி அமாவாசை அன்றுதான் பண்ண வேண்டும் என்கிறார். 2 வாத்தியார்களிடம் கேட்டு தான் ஆனி மாதத்தில் பண்ணியாகிறது. தவறாக ஏதும் பண்ணி விடக் கூடாதே என்று மனம் சஞ்சலமடைகிறது. தயவு செய்து தேவரீர் இதற்குச் சரியா தீர்வை அளிக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

ஆடி மாதம் பிறப்பதற்கு முன் என்பதால் ,ஆனி அமாவாஸ்யை என்பதே சரியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top