ஹிரண்யகர்பன் என்ற பெயர் பொதுவாக பிரம்மாவைக் குறிக்கும். அப்படியென்றால் ஹிரண்யகர்ப சாளக்கிராமம் என்பது பிரம்ம சாளக்கிராமத்தைக் குறிக்குமா அல்லது பெருமாள் மட்டுமே இங்கு ஹிரண்யகர்பனாகக் குறிப்பிடப்படுகிறாரா? பரந்யாஸம் (ப்ரபத்தி) செய்து கொண்டவர்கள் ஹிரண்யகர்ப சாளக்கிராமத்தை வைத்து திருவாராதனம் செய்யலாமா? இதனால் தேவதாந்தர ஸம்பந்தம் ஏற்படுமா?

வேதத்தில் ஹிரண்யகர்பன் என்று பெருமாளுக்கும் பெயர் உண்டு. மேலும் இப்பெயர் பெருமாளுக்குத்தான் பொருத்தமான பெயர். அதனால் தாராளமாக ஹிரண்யகர்ப சாளக்கிராமத்திற்குத் திருவாராதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top