அடியேன் பரந்யாஸம் செய்துகொள்ளும் சமயத்தில் யோகாஸனங்கள் பழகி வந்தேன். ஆனால் பரந்யாஸம் முடிந்த 3 மாதங்களில் அதை நிறுத்திவிட்டேன். யோகா பயிற்சிக்கும் பிற தேவதை ஸம்பந்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? மனதை அடக்குவதற்கு யோகா நல்லது என்று ஸ்ரீகிருஷ்ண பகவானும், ஸ்வாமி தேசிகனும் கூட பரிந்துரைத்துள்ளார்கள் என்று அடியேன் புரிந்து வைத்துள்ளேன். அடியேன் உடற்பயிற்சிக்காகக் கற்றுத்தரப்பட்ட ஆஸனங்களை மட்டுமே செய்து வந்தேன். யோகா வகுப்பில் வழக்கமாக “யோகேந சித்தஸ்ய பதேந வாசாம்…” என்ற பதஞ்ஜலி துதியுடனும், சில சமயங்களில் அரிதாக “குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு…” என்ற ஸ்லோகத்துடனும் வகுப்பைத் தொடங்குவார்கள். இதனால் தேவதாந்தர ஸம்பந்தம் ஏற்படுமா?

யோகா செய்யலாம். அதிலே “குருர்ப்ரஹ்மா” போன்ற ஶ்லோகங்கள் அவர்கள் சொன்னாலும் நீங்கள் சொல்லவேண்டிய நிர்பந்தம் கிடையாது. அப்படிச் சொல்லவேண்டியிருந்தால் அந்தராத்மாவான பகவானை நினைத்துக்கொள்ளவும். யாராக இருந்தாலும் பெருமாள்தான் என்று நினைக்கவும். முடிந்தால் சொல்லாமல் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top