நிறைய சாளக்கிராம பெருமாள் ஏளியிருப்பதனால் தவறில்லை. எல்லாப் பெருமாளுக்கும் ஒரே நாளில் திருமஞ்சனம் பண்ணவேண்டுமென்றும், எல்லா தினமும் செய்யவேண்டுமென்றும் இல்லை. இரண்டு மூன்று பெருமாளை ஏளப்பண்ணி மாற்றி மாற்றி முறை வைத்துக்கூட திருமஞ்சனம் செய்யலாம். அகத்திலேயே வைத்துக்கொள்ளலாம். அல்லது திருவாராதனம் செய்பவர்களிடம் கொடுக்கலாம். ஆற்றில் விடவேண்டாம்.

