நம் வம்சத்துப் பெரியவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்விப்பதற்கான ஶாஸ்திர விதிமுறைகள் யாவை? அடியேனின் நாட்டுப்பெண் இப்போது கர்பமாக இருக்கிறாள். அடியேனின் தாயார் ஜீவித்திருக்கிறார் . அடியேனின் தகப்பனார் பரமபதித்துவிட்டார். அடியேன் என் தாயாருக்கு மூத்த புத்திரன்; அடியேனின் மூத்த மகளும் இப்போது கர்பமாக இருக்கிறாள். கணவரை இழந்த அடியேனின் தாயாருக்குக் கனகாபிஷேகம் செய்விக்கலாமா? அப்படிச் செய்யலாமெனில் எப்போது செய்ய வேண்டும்? அடியேனுக்கு பேத்தி பிறந்தாலும் இதைச் செய்யலாமா?

பொதுவாக நம் ஸம்ப்ரதாயத்தில் கனகாபிஷேகம் செய்யவேண்டும் என்ற விதியில்லை. செய்வதானாலும், ஒரு புருஷருடைய பிள்ளைக்குப் பிள்ளைக்குப் பிள்ளை (அதாவது பௌத்ரனுக்குப் பிள்ளை) பிறந்தால் செய்வது வழக்கம். ஸ்த்ரீகளுக்குத் தனியாக செய்யும் வழக்கமில்லை. நம் அகத்தில் கர்பிணிப் பெண்கள் இருக்கும்போது அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்வரை இதைச் செய்யும் வழக்கமும் இல்லை. அப்படிச் செய்யவேண்டுமென்றால் உங்களது அகத்து வாத்தியாரைக் கேட்டு செய்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top