பொதுவாக ஷஷ்டியப்தபூர்த்தியை 60ஆவது வயது முடிவில் (ஷஷ்டி அப்த பூர்த்தி) செய்வார்கள். ஒருவேளை அதில் ஏதாவது தடங்கல்கள் வந்துவிட்டால், அதே நக்ஷத்திரத்தில் அடுத்த மாதத்திலோ அதற்கு அடுத்த மாதத்திலோ செய்கிறார்கள். ஷஷ்டியப்த பூர்த்தியை உத்தேசித்து அத்யயனம் செய்தவர்களுக்கு ஸம்பாவனை செய்வதுதான் உத்தேஶ்யம் என்பதாகச் சொல்லி வேறு மாதத்தில் செய்கிறார்கள். தவறில்லை என்று தோன்றுகிறது.

