பெருமாளுக்குப் பழங்களை அமுதுசெய்விக்கும்பொழுது தோலை உரித்தோ, அல்லது துண்டுகாளாக நறுக்கியோ கண்டருளப் பண்ண வேண்டுமா? உதாரணத்திற்கு: வாழைப்பழம், சாத்துக்குடி போன்றவற்றைத் தோல் உரித்தும்; ஆப்பிள், மாம்பழம் போன்றவற்றை நறுக்கியும் ஸமர்ப்பிக்கலாமா?

பெருமாளுக்குப் பழங்களை அமுதுசெய்விக்கும் பொழுது தோலுரித்து, துண்டங்களாக வெட்டிச் செய்வதுதான் நல்லது. ஆனால் அந்த ப்ரசாதத்தை உடனே ஸ்வீகரிக்கணும். அது முடியாதபோது ப்ரசாதம் வீணாகப் போய்விடும் வாய்ப்புள்ளது. ஆகையால் வாழைப்பழம் போன்றவற்றில் நுணியில் தோலுரித்து கண்டருளப்பண்ணுவார்கள். அதன்பிறகு யதாசௌகர்யம் உபயோகிக்கலாம். தோலுரித்து, துண்டங்களாக்கி அமுதுசெய்விப்பது நல்லது ஆனால் அதை உடனே உபயோகிக்கும்படியாக இருக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top