பொதுவாக ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு, 9-ம் நாளில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவதைத் தவிர்க்கும் வழக்கம் எங்களிடம் உள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் என்ன, இது உண்மையில் அசுபமானதா மற்றும் இதை அவ்வளவு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமா?

9ஆம் நாள் அந்த இடத்திற்கு வரலாம் ஆனால் இரவு அங்கே தங்கக்கூடாது. அதாவது அந்த இடத்தில் இரவு தூங்கக்கூடாது, ஸயனம் மட்டும் வேறு இடம் என்று ஒரு வழக்கம் பெரியவர்களிடம் உள்ளது. இது கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமா என்றால் அது அவரவர் மனதைப் பொறுத்தது.. அந்த அகத்துப் பெரியவர்கள் வழக்கத்தில் இருந்தால் கண்டிப்பாகப் பின்பற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top