Author name: Global Stotra Parayana Kainkaryam

சுபகிருது – ஆவணி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும். Vidwan’s reply: …

சுபகிருது – ஆவணி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆவணி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று புரிகிறது. அதில் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி போன்ற இரண்டு ஶ்லோகம் மட்டும் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி ஆகிய இரண்டு ஶ்லோகங்களும் சேவிக்கலாம்.

Loading

சுபகிருது – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை என்ன செய்ய வேண்டும்? பழைய பவித்ரமாலைகள் இருந்தால் அதை என்ன செய்தல் வேண்டும்? Vidwan’s reply: கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை அவற்றைத் தரித்துக்கொண்டு அனுஷ்டானம், திருவாராதனம், ஜபம் போன்றவற்றைச் செய்யலாம். சுத்தமாக இருக்கும் சமயங்களில் நாம் அதைத் தரித்துக்கொள்ளலாம். அந்தப் பவித்ர மாலைகள் பழையதாக ஆகிவிட்டால், அதைக் களையும்போது அசுத்தமான இடத்தில் சேர்க்காமல் சுத்தாமன இடத்தில் சேர்க்கலாம். அதாவது கால் படாத இடங்களில், அல்லது நதியில் சேர்த்து விடலாம். சென்ற சுதர்சன …

சுபகிருது – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – ஆடி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? என்பதை இன்றைய நன்னெறியில் வித்வான் திருமுகமாய் அறிய கீழே உள்ள படத்தை click செய்யவும். ஸந்தியாவந்தனம் மந்திரங்களுக்கு இங்கே உள்ள காணொளியை click செய்யவும்

Loading

சுபகிருது – ஆடி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன் Vidwan’s reply: “ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷா” என்ற க்ரந்தத்தில் நித்யமே யோகா என்று, அதாவது இராத்ரி வேளையில் யோகம் பண்ணுவது பற்றி ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார். …

சுபகிருது – ஆடி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆடி – ஸ்த்ரீ தர்மம்

திருமாங்கல்ய சரடை பொதுவாக நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாமா? இது சரியா? Vidwan’s reply: திருமாங்கல்ய சரடை நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் என்பது சரிதான். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து, மற்றைய நாட்களில் ராகுகாலம் எமகண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டுமா? Vidwan’s reply: இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டும் என்ற நியமங்கள் கிடையாது. ஆனால், சில பேருக்கு சில தினங்களில் (அமாவாஸை போன்ற தினங்களில்) …

சுபகிருது – ஆடி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஆடி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஆஹார நியமப்படி பொதுவாக நிஷித்தமான காய்கறிகள், பழங்கள் எவையெவை என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் (தர்பூசணி, தக்காளி, முருக்கை போன்றவை). Vidwan’s reply: தர்பூசணி தக்காளி இவை இரண்டையும் சில பேர் சேர்த்துக்கொள்கிறார்கள். சில பேர் சேர்த்துக் கொள்வதில்லை. மிகவும் ஆசாரமாக இருக்கிறவர்கள் இவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்வதில்லை. அதைத் தவிர முருங்கை, வெங்காயம், முள்ளங்கி, முட்டைக்கோஸ் முதலானவையெல்லாம் அடியோடு கூடவே கூடாது என்பதாக எல்லாருமே விட்டிருக்கிறார்கள். பூண்டு போன்ற நிஷித்த வஸ்துவை மருந்தாக உட்கொள்ளலாமா? (இருமல், சளி போன்ற சமயம் …

சுபகிருது – ஆடி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – ஆனி(2) – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பரிபாஷை அறிவோம் பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை. ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களின் தொகுப்பை நூல் அல்லது புத்தகம் என்பதை பரிபாஷையில் இனிமையாக சொல்லவேண்டும் என்றால் “ஶ்ரீகோஶம்” என்று உரைப்பார்கள். அதேபோல் அவர்களின் பாசுரங்களை – ஸ்ரீ ஸூக்திகள் என்பார்கள்.

Loading

Scroll to Top