Sudarsanam Questions

ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன். Vidwan’s reply: ப்ரம்மச்சாரிகளுக்குத் தீட்டு கிடையாது. ஆகையால், அவர்கள் தாமே பெருமாளுக்கு ப்ரசாதம் செய்து நிவேதனம் செய்வதாக இருந்தால், திருவாராதனம் செய்யலாம். குறிப்புகள்: ஆனால், தீட்டு உள்ளவர்கள் செய்யும் தளிகையை அவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், அவர்களுக்கும் அசுத்தி ஏற்படும். போதாயன அமாவாஸைக்கும், அமாவாஸைக்கும் வித்யாசம் என்ன? அமாவாஸை தர்பணத்தை ,போதாயன அமாவாஸை அன்று ஏன் செய்வதில்லை? மேலும், சில மாதங்களில் மட்டும் மாறி வருவதன் தாத்பர்யம் …

ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏன் எம்பெருமானார் எம்பெருமானை விடப் பெரியவர்? (ஒரு பாலகனின் கேள்வி) Vidwan’s reply: எம்பெருமானை நமக்குக் காட்டிக்கொடுத்தவரே எம்பெருமானார்தான். அவர் இல்லாவிட்டால் பெருமாளைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாமலே போயிருக்கும். குறிப்புகள் இவ்விஷயம் இராமானுஜ நூற்றந்தாதியில், ”மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் கணக்கில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கின்ற பாசுரத்தில் சாதிக்கப்பட்டிருக்கிறது. அடியேனின் குழந்தைக்கு நப்பின்னை யார் , ஆண்டாள் …

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

இக்கால சூழலில், அதாவது இன்றைய லௌகீக வாழ்வில் குடும்பம் மற்றும் சக ஊழியர்கள் போன்றோரின் அழுத்தங்களையும் தாண்டி நம் சாஸ்திரம் சம்ப்ரதாயம் காட்டிய வழிக்கும் பங்கம் வாராது நடுநிலையாக வாழ வழி காட்டவும். Vidwan’s reply சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானகளைத் தவாறமல் செய்யவும். ஓய்வு நேரங்களில் முடிந்த வரை ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ வாசித்தலும், உபன்யாசங்கள் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு நம் ஸ்வாமி தேசிகனே குறிப்பிட்ட நல் வழி தினமும் யோகா செய்தல் …

ப்லவ – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – ஆவணி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்தீரிகள் தளிகை ஸமர்ப்பிக்கும் போது என்ன ஶ்லோகங்கள்/பாசுரங்கள் சேவிக்க வேண்டும் என்பதை விளக்க ப்ரார்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்தீரிகள், கோவிந்த நாமமும், “கூடாரை வெல்லும் சீர்..” பாசுரமும் சொல்லி தளிகை ஸமர்ப்பிக்கலாம்.

Loading

ப்லவ – ஆடி – பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா? Vidwan’s reply த்ரிஜடை செய்த ஶரணாகதி மோக்ஷார்த்தமல்ல. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலனுக்காகச் செய்ததே அன்றி மோக்ஷார்த்தமாக அல்ல. குறிப்புகள்: அவளுடைய ஶரணாகதியில் அங்கங்கள் எல்லாம் ரொம்ப சரியாக இருந்தது என்று சுவாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தின் பரிகர விபாக அதிகாரத்தில் ‌சொல்லி …

ப்லவ – ஆடி – பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – ஆடி – ஸ்த்ரீ தர்மம்

ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா? Vidwan’s reply ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்புகள்: புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு – பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில் இருக்கும் வழக்கம். ஆத்தில் …

ப்லவ – ஆடி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – ஆடி – ஆசாரம் அனுஷ்டானம்

அடியேன், பொதுவாக சிகப்பு மஞ்சள் என இரு வர்ண ஸ்ரீசூர்ணம் இருக்கிறது. இதில் புருஷர்கள் பரந்யாஸம் ஆன பின் சிகப்பு ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா? Vidwan’s reply: ஸ்ரீசூர்ணம் தரிப்பதற்கும் பரந்யாஸத்திற்கும் ஸம்பந்தமில்லை. மஞ்சள் (ஹரித்ரா) கலந்த ஸ்ரீ சூர்ணம் தரிப்பதே ஸ்ரேஷ்டம்(உயர்ந்தது). சிகப்பு தரிப்பதிலும் தோஷமில்லை. குறிப்புகள்: பொதுவாக ஹரித்ரா(மஞ்சள்) கலந்தது இட்டுக்கொள்ள வேண்டும் என உள்ளது. மஞ்சள் ஸ்ரீ சூர்ணத்தினுடன் ஒரு கலவை கலப்பதால்தான் அது சிகப்பாகிறது. ஆகையால் மஞ்சள் ஸ்ரீ சூர்ணம் தரிப்பது விசேஷம். ஸ்ரீசூர்ணம் …

ப்லவ – ஆடி – ஆசாரம் அனுஷ்டானம் Read More »

Loading

Subhakrit – Aippasi – Morals Revealed by Sampradayam

Doubts about the forthcoming lunar eclipse on 8th November. Must the tharppanam be performed when the moon is visible? Or must it be performed during the sparsham (commencement of eclipse)? If the tharppanam is when the moon is visible, must we interpret that it is after completion of the eclipse? If it is cloudy, the …

Subhakrit – Aippasi – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Scroll to Top