ஆண்டாளே ஒரு கிளி வளர்த்தார் என்பதாகவும் அக்கிளிக்கு பகவானின் திருநாமங்களைச் சொல்லிக்கொடுத்தார் என்பதாக அவளுடைய பாசுரங்களில் இருக்கிறது. “கூட்டிலிருந்து கிளியெப்போதும் கோவிந்தா கோவிந்தாவென்றழைக்கும்”, “எடுத்த என் கோலக்கிளியே” என்றெல்லாம் சாதிக்கிறார். கிளி வளர்த்து பகவான் நாமங்களைச் சொல்லச்சொல்லியிருந்தார் என்பதாகத் தெரிகிறது. அதன் அடையாளமாக அவர் கையில் கிளி இருக்கிறது.

