“அஜ்ஞ்நாத்….க்ஷமஸ்வ புருக்ஷோத்தம/விஷ்வக்சேநாதிபயோ நமஹ” என்பதை சொல்லுவதில் தவறு இல்லை. ஆனால், இதற்காக ஒரு வழக்கம் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தில் சொல்லி உள்ளனர். அது ஸ்ரீ கிருஷ்ண நாம ஸ்மரணம். எல்லா அனுஷ்டிப்பிலும் கடைசியில் ஸ்ரீ கிருஷ்ண என பத்து முறை சொல்ல வேணும். அல்லது பிராயஶ்சித்தானி…. என்று தொடங்கும் ஶ்லோகம் சொல்லலாம்.

