அடியேன் பரந்யாஸம் செய்துள்ளேன், அடியேன் கேள்விபட்டது பரஸமர்ப்பணம் செய்தவர்கள் தேவதாந்த்ர சம்பந்தம் கொண்டவர்களை நமஸ்கரிக்கக் கூடாதென்று. அடியேனின் மாமனார் மாமியார் இருவருக்கும் தேவதாந்த்ர ஸம்பந்தம் கொண்டவர்கள். அவர்களைச் சேவிக்க நேரும்போது என்ன செய்வது? எம்பெருமான் அனைத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று எண்ணி அவர்களைச் சேவிக்கலாமா? இதனால் மோக்ஷம் தடையாகுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 மாமனார், மாமியார் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருக்கின்ற படியினாலே அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.