முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பது நம் பெரியோர்கள் எல்லாம் சொல்லியிருப்பதுதான். அதற்கு தனிப்பட்ட குறிப்பு என்று எதுவும் கிடையாது. மேலும் ஆழ்வார் அருளியது முகுந்தமாலையிலிருந்து என்றாக நம் ஆசார்யர்கள் எடுக்கவில்லை. அதில் கடைசியில் “ராக்ஞா குலசேகரே” என்று சொல்லியிருப்பார் ஆகையால் குலசேகர ராஜாதான் பண்ணியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு என்ன சந்தேகமென்றால், குலசேகர ராஜா என்ற பெயரில் நிறைய ராஜா இருந்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில் நிறைய பேருக்கு குலசேகர: என்ற பெயருண்டு. நாம் குறிப்பிடும் குலசேகர ஆழ்வாரும் அவரும் ஒன்றா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அந்த ஶ்லோகத்தின் பாவங்களும் ஆழ்வாரின் பாவங்கள் போலே இருப்பதினால் இருவரும் ஒன்றுதான் என்று நிறையபேர் சமாதானமாகக் கூறுகிறார்கள்.

