ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைத் தாராளமாச் சேவிக்கலாம். ஹரே க்ருஷ்ணா ஜபம் செய்யலாம். ஆனால் துளசிமாலை அணிவதற்கு சில நியமங்கள் உண்டு அந்த ரீதியில் பார்த்தால் அதை அணிவது நம் சம்ப்ரதாயத்தில் வழக்கமில்லை. துளசிமாலை ப்ரதிஷ்டை பண்ணியிருந்தால் அதை ஸ்த்ரீகள் தரிக்கக்கூடாது. புருஷர்களுக்கும் எப்போது தரிக்கலாம், எப்போது கூடாது என்று சில நிபந்தனையெல்லாம் இருக்கிறது. இன்று ப்ரதிஷ்டை பண்ணாததை சிலர் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்கள் வழக்கத்தில் இல்லாததைச் செய்யாது அவர்கள் வழக்கத்தில் இருப்பதை பின்பற்றினாலே போதுமானதாகும்.