விவாஹரத்து என்பது சட்ட ரீதியாகதான் உண்டே தவிர சாஸ்த்ர ரீதியாக கிடையாது. ஒரு ஸ்த்ரீ ஒரு புருஷனைக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பின் ஆயுசுக்கும் அவள் அவனுடைய தர்மபத்னி தான். அது ஶாஸ்த்ர ரீதியாக மாற்ற முடியாது. சட்ட ரீதியாக விவாஹரத்து என்று இருந்தாலும் ஶாஸ்த்ர ரீதியாக அதை மாற்ற முடியாது. அதனால் விவாஹரத்தானவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன என்கின்ற விதிமுறை எல்லாம் சாஸ்திரத்தில் கிடையாது.
ஒரு ஸ்த்ரீயானவள் பர்த்தாவுடன் சேர்ந்து செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். அதுதான் சாஸ்த்ரம். அதையொட்டி இருக்கின்ற புக்ககத்து உறவுகளுக்கு ஏற்பட்ட கடமைகளையும் செய்ய வேண்டும். எப்போது அவள் தன் பர்த்தாவுடன் இல்லையோ, அப்பொழுதே அந்தச் சமயத்தில் மற்ற கடமைகள் , மற்ற கர்தவ்யங்கள் எல்லாம் அவள் பண்ண முடியாமல் போய் விடுகிறது. அது சரியா தவறான்னு கேட்டால், தவறுதான். விவாஹரத்து என்ற ஒன்று நடக்கிறதே தவறுதான். அது ஏற்பட்ட பக்ஷத்தில் அதுக்கு மேல வேற சிந்தனை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதுவே நடந்திருக்க கூடாது. அது நடந்துவிட்டது. அதனால் மற்றதைப் பற்றி யோசித்து என்ன பயன் என்று பதில் சொல்லலாம் என்று தோன்றுகிறது.