a.ஶ்ரீ பரதாழ்வார் சித்ரகூடத்தில் செய்த ஶரணாகதியில் அயோத்திவாழ் மக்களும் அடங்குவர். ஆகையால் அவர்களும் ஶராணாகதி செய்ததாகக் கணக்கு. இந்த ஶரணாகதியை பற்றியும், அபய ப்ரதாணம் பற்றியும் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதாணத்தில் சாதிக்கிறார். அபய ப்ரதாண காலக்ஷேபத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அக்காலக்ஷேபத்தின் பதிவுகளைக் கேட்க : https://www.sampradayamanjari.org/register/ என்ற linkல் பதிவு செய்து GSPK ID கிடைத்த பின், https://t.me/Mukunth_SR என்ற Telegram ID யை தொடர்பு கொள்ளவும்.
b.அர்ச்சிராதி கதி வாழியாக யார் ஶ்ரீவைகுண்டத்திற்குப் போகிறார்களோ அவர்கள்தான் திரும்பி வரமாட்டார். பகவானே ஸ்வதந்திரனாக இருந்து அவர்களை அழைத்துக்கொண்டு போய்வந்தார் என்பது மோக்ஷமாகாது, அதாவது மோஷம் பெற்றனர் என்ற அர்த்தம் ஆகாது. ஆகையால் பகவானே அழைத்துப்போய் வந்தார் என்பது சரியாகும்.

