ஸ்வாமி தேஶிகன் சது:ஶ்லோகியின் வ்யாக்யானத்தில் அவதாரிகை ஶ்லோகத்தில் ப்ரம்ம சூத்ரத்தின் நான்கு அத்யாயங்களை மேற்கோள் காட்டி பெருமாளும் பிராட்டியும் சமம் என்று கூறுவதாக ஸ்ரீ கரப்பங்காடு சுவாமியின் youtube உபந்யாசத்தில் இருந்து அடியேன் புரிந்து கொண்டேன். இது தவறு எனில் சரியான விளக்கம் அளிக்கவும். மேலும் இந்த ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலோ அல்லது வேறு சில்லரை
க்ரந்தங்களிலோ கையாண்டு இருந்தால் அதனைத் தெளிவு படுத்தவும்.