கொலுவில் மரப்பாச்சி பொம்மை வைப்பதன் தாத்பர்யம் என்ன ?

கொலு வைப்பதென்பது பல தலைமுறைகளாக வந்து கொண்டிருக்கக்கூடிய வழக்கமாகும். கொலுவில் பாரம்பரியமான பொம்மை அதாவது அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி காலத்திலிருந்து இருக்கும் பொம்மையை வைப்பது வழக்கத்தில் இருக்கிறது. மண் பொம்மைகள் எல்லாம் கொஞ்ச நாட்களில் பழசாகப் போய்விடும், உடைந்து போய்விடும். இதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தக் காலத்தில் காகிதக் கூழால் செய்யப்பட்ட பொம்மைகள் கிடையாது. அதனால் மரத்தில் பொம்மை இருந்தால்,அது பல காலத்திற்கு நீடித்து நன்றாக இருக்கும். அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கலாம் என்பதனால் மரப்பாச்சி பொம்மை கொலுவில் வைப்பது வழக்கமாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top