தங்கள் அகத்தில் பெருமாளுக்கு வெள்ளை சர்க்கரை சேர்த்து பக்ஷணம் பண்ணும் வழக்கமில்லை என்றால் சேர்க்காமல் பண்ணுங்கள். சேர்ப்ப்வர்களாக இருந்தால் வெள்ளை சர்க்கரையில் பக்ஷணம் பண்ணலாம். அவரவர் அகத்து வழக்கப்படிச் செய்யவும்.
குறிப்பு:
வெல்லம் சேர்த்து ப்ரஸாதம் செய்வது ரொம்ப விசேஷம். ஆனால் வெள்ளை சர்க்கரை சேர்த்துப் பண்ணைக் கூடாது என்கின்ற நிஷேதமும் இல்லை. சில நாட்களில் வெள்ளை சர்க்கரை கட்டாயம் சேர்க்கக்கூடாது. துவாதசி , பித்ரு தினங்கள்(அமாவாஸை, மாஸப்பிறப்பு, ஶார்த்தம்) போன்ற நாட்களில் கட்டாயம் சேர்க்கக்கூடாது. மற்ற நாட்கள், பண்டிகை நாட்கள், அதாவது தீபாவளி, ஸ்ரீஜயந்தி போன்ற நாட்களில் வெள்ளை சர்க்கரை சேர்த்து பக்ஷணம் செய்யவது பெரியோர்கள் வழக்கத்தில் இருக்கின்றது.

