ஒரு மாதத்தில் இரண்டு முறை நக்ஷத்திரங்கள் வரும்போது முன்பு அல்லது பின்பு வரும் நக்ஷத்திரத்தில் ஏதேனும் ஒன்றில் சில சமயம் மாஸப்பிறப்பு அல்லது தர்ப்பணம் பண்ணும் நாளாக வரும். அதுதான் ஸங்க்ரமண தோஷம். அப்படித் தர்ப்பணம் பண்ணும்நாளாக வரும் பக்ஷத்தில் அன்று பிறந்தநாள் கொண்டாடக்கூடாது. ஸ்ங்கரமணாதி தோஷம் என்பதில், ஆதி பதத்தினால், சில சமயம் இரண்டில் ஒரு நாள் க்ரஹணம் வந்தால் அப்போது க்ரஹணம் இல்லாத நக்ஷத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம்.

