பாதுகாராதன தீர்த்தத்தையும் சில க்ருஹங்களில் 3 முறை கொடுக்கும் வழக்கமிருக்கிறது, சில க்ருஹங்களில் ஒருமுறை கொடுக்கும் வழக்கமிருக்கிறது. ஆசார்யனின் ஶ்ரீபாதுகா தீர்த்தம் மிகவும் உயர்வானது ஆகையால் முதலில் அதை சிரேன தரித்துக்கொண்டு பின்பு உட்கொள்வது என்று ஆசார்யனின் பாதுகா மகிமையைப் பறைசாற்றும்படி இப்படி வைத்துக்கொண்டுள்ளார்கள். முதலில் பெருமாள் தீர்த்தம் வாங்கிக்கொண்டு பின்பு பாதுகா தீர்த்தம் வாங்கிக்கொள்ளவேண்டும்.

