தினமும் ஸந்த்யாவந்தனத்துடன் இந்த மந்திரங்களெல்லாம் ஜபமாக பண்ணவேண்டும். உட்காந்துகொண்டு ப்ராணாயாமத்துடன் சங்கல்பம் பண்ணி ஜபமாகச் செய்தல் வேண்டும். இதை நித்யானுசந்தானமாச் சொல்வதைவிட ஜபமாக பண்ணால் நல்லது. சில சமயம் திருவாராதன சமயம் அர்ச்சனையில் சொல்வார்கள். என்னென்ன மந்திரங்கள் தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம். மந்திரங்கள் தெரியாவிட்டால் ஶ்லோகங்கள் சொல்லலாம்.

