வேதம், ஸ்ம்ருதிகள் போன்றவற்றில் ஆசார காண்டம் என்பதில் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டப்படி ஆசாரமாக இருத்தல்தான் வைதிக சுத்தம் என்பதாகும். அதில் தைத்த துணி என்பது ப்ராசீன காலத்தில் இல்லை, பின்னாளில் வந்ததுதான். அதனால் தைத்த துணி அந்தளவு சுத்தமில்லை. பல துணிகளைச் சேர்த்து ஒட்டுப்போட்டு வருவதினால் அது சுத்தமில்லை.

