ஶ்ரீராம சரம ஶ்லோகத்திற்கும் வராஹ சரம ஶ்லோகத்திற்கும் அங்கீகாரமில்லை என்பதில்லை. ஸ்வாமி தேஶிகன் அவை இரண்டிற்கும் ரஹஸ்ய க்ரந்தமே சாதித்திருக்கிறார். ஶ்ரீராம சரம ஶ்லோகத்திற்காக “அபய ப்ரதாந ஸாரமும்”, வராஹ சரம ஶ்லோகத்திற்காக “ரஹஸ்ய சிகாமணியும்” சாதித்திருக்கிறார்.
ரஹஸ்ய த்ரயத்தில் இது விதாயக மந்திரமாக இருப்பதினால், ஶ்ரீக்ருஷ்ண சரம ஶ்லோகமானது அவ்விடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி மீதி இரண்டு ஶ்லோகங்களுக்கும் அதே அங்கீகாரம் அதே முக்யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை ரஹஸ்ய க்ரந்தங்களிலிருந்து பார்க்கமுடிகிறது.

