1. திருவாராதனத்தில் சாளக்கிராம மூர்த்திக்குச் சந்தனம் ஸமர்ப்பிப்பது போல் த்வாரகா சிலாவிற்கு என்ன ஸமர்பிக்க வேண்டும்? 2.எம்பெருமானுக்கு தூபம் ஸமர்ப்பிக்கும் சமயம் ஊதுபத்தி ஸமர்ப்பிக்கலாமா? 3. திருவாராதனம் முடிந்தபின் சாளக்கிராம பெருமாளை மீண்டும் பெட்டியில் ஏளப்பண்ணும் முன் திருவாராதனத்தின் சமயம் சாற்றிய சந்தனத்தை களைந்துவிட்டு ஏளப்பண்ணவேண்டுமா? 4. திருத்துழாயைப் புருஷர்கள் காதின் எந்தப் பகுதியில் வைத்துக்கொள்ளவேண்டும்? 5. குறிப்பாக எந்தெந்தப் புஷபங்களைப் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகிக்கக்கூடாது. அடியேன் வசிக்குமிடத்தில் பல புஷ்பங்கள் கிடைக்காது. திருத்துழாய் மட்டும் அனைத்து ஆசனம், அர்ச்சனை, சாற்றுமுறைகளுக்குப் போதுமானதா?

1.சாளக்கிராம மூர்த்திக்குப் பண்ணுவது போல் துவாரகா சிலாவிற்கும் சந்தனத்தை ஸமர்ப்பிக்கலாம்.
2.தூபம் ஸமர்ப்பிக்கும் போது ஊதுபத்தி ஸமர்ப்பிப்பது சிஷ்டாசாரத்தில் இல்லை.
3.சந்தனத்தை களைவது எதற்கென்றால் நமக்கு அந்தச் சந்தனம் ப்ராசாதமாக வேண்டும் என்கிறபடியால்தான்.
4.திருத்துழாயை வலதுகாதின் உட்பக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
5.புஷ்பங்கள் கிடைக்காவிட்டாலும் திருத்துழாயே போதுமானது. அதை வைத்தே அனைத்து உபசாரங்களையும் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top