வைஶ்வதேவம் ஒரு நித்யானுஷ்டானம் என்று தெரிகிறது. ஆனால் அன்ன ரூபமாகச் செய்வதற்கு முடியவில்லை, (சூழ்நிலையினால்). இதை ஜல ரூபமாக (தர்ப்பணமாகச்) செய்யலாம் என்றும், ஆனால் அதற்கு முன் சில நாட்களாவது அன்ன ரூபமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒருவர் சொன்னார். அடியேன் ஸாம வேதி, சாந்தோக்யான்னிஹ புஸ்தகத்தில் ஜல ரூபமாகவும் செய்யலாம் என்று சிலர் அபிப்ராயம் என்று மட்டும் உள்ளது. எப்படிச் செய்ய வேண்டும் என்பதோ, சில நாட்கள் அன்னத்தில் செய்வது பற்றியோ விபரம் இல்லை. இது பற்றி விபரம் கிடைக்குமா?

வைஶ்வதேவம் ஜல ரூபமாகச் செய்யலாம். முதலில் ஒரு ஆசார்யனிடம்போய் வைஶ்வதேவ மந்த்ர உபதேசம் பெற்றுக்கொள்வார்கள். அச்சமயத்தில் அன்ன ரூபமாகச் செய்து உபதேசம் வாங்கிக்கொள்வது வழக்கம். மற்றபடி நித்யம் அன்ன ரூபமாகப் பண்ணவேண்டும். முடியாத பக்ஷத்தில் ஜல ரூபமாகப் பண்ணுவது வழக்கத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top