வைஶ்வதேவம் ஜல ரூபமாகச் செய்யலாம். முதலில் ஒரு ஆசார்யனிடம்போய் வைஶ்வதேவ மந்த்ர உபதேசம் பெற்றுக்கொள்வார்கள். அச்சமயத்தில் அன்ன ரூபமாகச் செய்து உபதேசம் வாங்கிக்கொள்வது வழக்கம். மற்றபடி நித்யம் அன்ன ரூபமாகப் பண்ணவேண்டும். முடியாத பக்ஷத்தில் ஜல ரூபமாகப் பண்ணுவது வழக்கத்தில் இருக்கிறது.

