அடியேன் பொதுவாக மஹாளய பக்ஷம் ஷஷ்டி அல்லது மத்யாஷ்டமி அல்லது மஹாபரணி அன்று பண்ணுவது வழக்கம். இவ்வருடம் அடியேனின் மாமாவின் வருஷாப்திகத்தில் பித்ரு ஸ்தானத்தில் அமர வேண்டிருக்கிறது. ஆகையால் இவ்வருடம் மத்யாஷ்டமி அன்று மஹாளயம் செய்யலாமா? மேலும் பித்ரு ஸ்தானத்தில் அமர்ந்தால் எத்தனை காயத்ரீ ஜபம் ப்ராயஶ்சித்தமாக பண்ணவேண்டும்?

தான் மஹாளயம் செய்யாமல், மற்றவர்கள் அன்னரூபமாகச் செய்யும் மஹாளயத்தில் அந்வயிக்கக் கூடாது என்பது ஶாஸ்த்ரம்.
மாமாவின் வருஷாப்திகம் என்று என்பது கேள்வியில் இல்லை. இவ்வருடம் மத்யாஷ்டமியன்று ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தவர்களுக்கு ஶ்ரீஜயந்தி ஆனபடியால் அன்று மஹாளயம் ஶ்ரீ முனித்ரய ஸம்ப்ரதாயத்தவர்கள் பண்ணக்கூடாது. ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயத்தவர்களாக இருந்தால், மத்யாஷ்டமி அன்று மஹாளய அனுஷ்டானத்தைச் செய்யலாம்.
வருஷாப்திக கைங்கர்யத்தில் அந்வயித்தால், 300 காயத்ரீ ப்ராயஶ்சித்தம். 3 நாள் வேறிடத்தில் இருக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top