ப்ரஹ்மச்சாரிகள், மாதா பிதா இருக்கும் புருஷர்கள் ஶ்ராத்தத்தில் நிமந்த்ரணத்தில் அமரலாமா?

ப்ரஹ்மச்சாரிகள் ஶ்ராத்தத்தில் நிமந்த்ரணத்தில் அமரக்கூடாது என்று புஸ்தகங்களில் இருக்கிறது ஆனால் அமருவது என்பது வழக்கத்தில் இருக்கிறது. விஷ்ணு ஸ்தானத்தில் அமரலாம். வேறு வழியில்லாத பக்ஷத்தில், விஶ்வேதேவர் ஸ்தானத்திலும் இருக்கலாம். பித்ரு ஸ்தானத்தில் இருக்கக்கூடாது.
ஜீவத் பித்ருக்கள் அதாவது மாதா பிதா இருப்பவர்கள் தாராளமாக ஶ்ராத்தத்தில் நிமந்தரணத்தில் அமரலாம். ஜீவத் பித்ருக்களைதான் பித்ரு ஸ்தானத்தில் அமர வைப்பார்கள். அவர்கள் பித்ரு ஸ்தானத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top