ஶ்ரீஜயந்தி நிர்ணயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் ஏற்படுகின்றன? நாம் ஏன் ஶ்ரீஜயந்திக்கு ஸப்தமி வேதையும் ந்ருஸிம்ஹ ஜயந்திக்கு த்ரயோதசி வேதை பற்றி பார்க்கிறோம்? என்றைய இரவு ரோஹிணி நக்ஷத்திரமோ அல்லது அஷ்டமி திதியோ இருக்கிறதோ அன்று என்று நிர்ணயம் பண்ணக்கூடாதா?

என்றைக்கு அஷ்டமி என நிர்ணயம் பண்ண நமக்கு அதிகாரம் இல்லை. பெரியவர்கள் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள். ஸப்தமி வேதை கூடாது என்று ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் ந்ருஸிம்ஹ ஜயந்திகு த்ரயோதசி வேதை 6 நாழிகைக்கு மேல் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் பெரியவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அதை அனுசரித்து நாம் அனுஷ்டானம் செய்கிறோம். நாமாக நிர்ணயிக்க நாம் ரிஷிகளும் அல்ல, பெரியவர்களும் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top