என்றைக்கு அஷ்டமி என நிர்ணயம் பண்ண நமக்கு அதிகாரம் இல்லை. பெரியவர்கள் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள். ஸப்தமி வேதை கூடாது என்று ஶ்ரீ ஸந்நிதி ஸம்ப்ரதாயத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் ந்ருஸிம்ஹ ஜயந்திகு த்ரயோதசி வேதை 6 நாழிகைக்கு மேல் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் பெரியவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். அதை அனுசரித்து நாம் அனுஷ்டானம் செய்கிறோம். நாமாக நிர்ணயிக்க நாம் ரிஷிகளும் அல்ல, பெரியவர்களும் அல்ல.

