பரந்யாஸம் செய்து கொள்ள பெரிய லக்ஷியத்தோடு வருகிறோம், மோக்ஷ பலன் வேண்டும் என்றும் எனக்கு இந்த ஸம்ஸார பலன் வேண்டாம் என்றும். அப்படியிருக்க காபியை லக்ஷியமாகக் கொண்டு போகக்கூடாது. மோக்ஷம் வேண்டும் என்பது பெரிய லக்ஷியம், காபி சாப்பிடுவதென்பது ஒன்றுமில்லாத ஒரு லக்ஷியம். அதனால் நாம் எதற்காக பரந்யாஸம் செய்கிறோம் என்ற உணர்வு இருக்கவேண்டுமென்று அப்படிச் சொல்லுகிறார்கள்.

