“குறிப்பெனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய்” என்பது க்ஷத்ரியர்களாக இருப்பவர்கள் விரோதிகளின் தலையை அறுப்பர். அதுவே ப்ராஹ்மணர்களாக இருப்பவர்கள் விரோதிகளுடைய மதங்களை வேரறுப்பர் என்பதைதான் இங்கே குறிக்கிறது.
ராஜாவாக இருப்பவர் தன்னுடைய ராஜ்யத்தில் தர்ம ஸ்தாபனம் பண்ணுவதற்காக அசுரர்கள், அசுரவாதம் பண்ணுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கலாம். அந்த ரீதியிலே க்ஷத்ரியர்கள் மூலமாக அவர்களைக் கொள்வதோ அல்லது அவர்களின் மதத்தை வேரறுப்பதோ சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

