a) வீட்டில் எத்தனை துவாரகா சிலைகளை (Dwaraka Shilas) வைத்திருக்கலாம்? சாளக்கிராமம் போல இதற்கும் ஏதேனும் எண்ணிக்கை வரையறை உண்டா? b) பெருமாள் சன்னிதியில் தையல் வேலைப்பாடுகள் கொண்ட வஸ்திரம் மற்றும் முத்து மாலைகளுடன் கூடிய பித்தளை விக்ரஹங்களை (கிருஷ்ணர் அல்லது ராமர்) அழகுக்காக கோவில் ஆழ்வாருக்கு வெளியே வைத்திருக்கலாமா? ஆராதனைக்காக இல்லாவிட்டாலும், அழகுக்காக ப்ரதிஷ்டை செய்யப்படாத விக்கிரகங்களைச் சந்நிதியில் வைக்க நம் ஸம்ப்ரதாயம் அனுமதிக்கிறதா? c) சாளக்கிராம திருவாராதனத்தில் ‘ஷோடஶ உபசாரங்கள்’ எப்போது செய்யப்பட வேண்டும்? எந்த ஆஸனத்தின் போது ஸமர்ப்பிக்க வேண்டும்? இதற்கு அர்க்ய தீர்த்தத்தைப் பயன்படுத்த வேண்டுமா? d) மானசீக ஆராதனை செய்வது அவசியமா? பெருமாள் பெட்டியைத் திறப்பதற்கு முன்னரா அல்லது பின்னரா எப்போது இதைச் செய்ய வேண்டும்?

a)துவாரகா சிலைக்குக் கணக்கில்லை.
b)நாம் திருவாராதனம் செய்யும் பெருமாளுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்துக்கொள்ளலாம். கோவிலாழ்வாருக்கு வெளியே வைக்கலாம். ஆனால் பெருமாள் மேடையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
c)ஷோடஶ உபசாரங்களில் அந்தந்த ஆசனத்திற்கு அந்தந்த உபசாரங்கள் என்று கணக்குண்டு. அதன்படி பண்ணவேண்டும். அர்க்யத்திற்கு அர்க்ய தீர்த்தம், பாத்யத்திற்கு பாத்ய தீர்த்தம் என எதெதற்கு எனென்ன தீர்த்தம் என்று கணக்குண்டு. ஷோடஶ உபசாரங்களில் அர்க்யம் பாத்யமென எல்லாமே உண்டு. “ஸ்நானம் வஸ்த்ரோபவீதம் மலயஜகுசுமே” என்று அர்க்யம் பாத்யம் ஆசமநீயம் தவிர மற்றவைக்கெல்லாம் ஸர்வார்த்த தோயம் என்று வைத்துள்ளார்கள்.
d)மானஸீக ஆராதனம் செய்வது அவசியம். திருவாராதனத்தில், பூதசுத்தி முடிந்ததற்குப் பின் ஆசனாதிகள் ஸமர்ப்பிக்கும் முன் நாம் மானசீக ஆராதனம் பண்ணவேண்டும் என்று உபதேசம் செய்வார்கள். அதாவது ஸங்கல்பம், பூதசுத்தி அதெல்லாம் ஆனபின் இதைப் பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top