a)துவாரகா சிலைக்குக் கணக்கில்லை.
b)நாம் திருவாராதனம் செய்யும் பெருமாளுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்துக்கொள்ளலாம். கோவிலாழ்வாருக்கு வெளியே வைக்கலாம். ஆனால் பெருமாள் மேடையைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
c)ஷோடஶ உபசாரங்களில் அந்தந்த ஆசனத்திற்கு அந்தந்த உபசாரங்கள் என்று கணக்குண்டு. அதன்படி பண்ணவேண்டும். அர்க்யத்திற்கு அர்க்ய தீர்த்தம், பாத்யத்திற்கு பாத்ய தீர்த்தம் என எதெதற்கு எனென்ன தீர்த்தம் என்று கணக்குண்டு. ஷோடஶ உபசாரங்களில் அர்க்யம் பாத்யமென எல்லாமே உண்டு. “ஸ்நானம் வஸ்த்ரோபவீதம் மலயஜகுசுமே” என்று அர்க்யம் பாத்யம் ஆசமநீயம் தவிர மற்றவைக்கெல்லாம் ஸர்வார்த்த தோயம் என்று வைத்துள்ளார்கள்.
d)மானஸீக ஆராதனம் செய்வது அவசியம். திருவாராதனத்தில், பூதசுத்தி முடிந்ததற்குப் பின் ஆசனாதிகள் ஸமர்ப்பிக்கும் முன் நாம் மானசீக ஆராதனம் பண்ணவேண்டும் என்று உபதேசம் செய்வார்கள். அதாவது ஸங்கல்பம், பூதசுத்தி அதெல்லாம் ஆனபின் இதைப் பண்ணவேண்டும்.

