அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சார்ந்த வடகலை ஸ்ரீவைஷ்ணவன். வடகலை ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்காக ஸ்ரீ மூன்றாம் பரகால சுவாமிகள் அருளிய வாழி திருநாமத்தைப் பற்றி அடியேன் அறிந்து கொண்டேன். ஆனால், அடியேன் பின்பற்றும் அஹோபில மடத்து குருபரம்பரை, மற்ற வடகலை ஸம்ப்ரதாயங்களான (பரகால மடம், ஆண்டவன் ஆஸ்ரமம்) போன்றவற்றிலிருந்து மாறுபட்டது. அஹோபில மடத்து குருபரம்பரை, எம்பெருமானார் ராமானுஜருக்குப் பின் ஸ்ரீ எம்பார், ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை என்று தென்னாச்சார்ய குருபரம்பரையை ஒட்டிச் செல்கிறது. எனது சந்தேகம் என்னவென்றால், அனைத்து வடகலை ஸ்ரீவைஷ்ணவர்களும் இந்த வாழி திருநாமத்தைச் சொல்லலாமா அல்லது அஹோபில மடத்து சிஷ்யர்கள் தென்னாச்சார்ய வாழி திருநாமத்தையே பின்பற்ற வேண்டுமா?

அவரவர்கள் ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்வது நல்லது. மற்ற ஸம்ப்ரதாய வாழித்திருநாமத்தைச் சொல்லக்கூடாது என்பதெல்லாம் கிடையாது. எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரவர் ஸம்ப்ரதாயத்தையொட்டி இருக்கும் வாழித்திருநாமத்தைச் சொல்ல வேண்டும்.
தென்னாச்சார்ய வாழித்திருநாமம் என்று ஒன்று தனியாகக் கிடையாது. அவர்கள் மணவாளமாமுனிகளுடையதைதான் சொல்லுகிறார்கள். அது ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவதில்லை. தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயத்திலேயே நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்களின் வாழித்திருநாமங்களை அவர்கள் சொல்வதில்லை. ஶ்ரீமத் அஹோபில மடத்தில் சொல்லுவது தென்னாச்சார்ய வாழித்திருநாமம் கிடையாது அது நம் ஆசார்யர் வாழித்திருநாமம்தான். இவர்கள் பொதுவான ஆசார்யர்கள் ஆகையால் தாராளமாகச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top