கட்டாயம் திருமண்காப்பு தரித்துக்கொண்டுதான் சந்தியாவந்தனம் செய்யவேண்டும். தீட்டுச் சமயங்களில் , தீட்டு உள்ளவர்களைக் காட்டிலும் அகத்திலிருக்கும் சிறுவர்களைக் கொண்டோ, அல்லது தீட்டு அல்லாதவர்களைக் கொண்டு விளக்கேற்றுவது உசிதம். அப்படி யாரும் இல்லாத பக்ஷத்தில் அவர்களே விளக்கேற்றலாம் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் தள்ளி நின்று விளக்கேற்றிவிட்டு அந்த விளக்கைப் பிறகு சுத்தி செய்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். பெருமாள் சந்நிதி கிட்டேயே இருக்கும் விளக்கை ஏற்றக்கூடாது. அதன் அருகிலேயே போகக்கூடாது. மேலே சொன்னதெல்லாம் விளக்கு, பெருமாள் சந்நிதி அருகே இல்லையென்றால்தான்.

