ஶாஸ்திரங்களின்படி குளிர்ந்த நீரில்தான் (அவகாந ஸ்நானம்) ஸ்நானம் செய்யவேண்டும் என்று இருக்கிறது. ரோகிகள், வயதானவர்கள், உடம்புமுடியாதவர்கள் வெதுவெதுப்பான நீரில் ஸ்நானம் பண்ணலாம். அவர்களும்கூட ஶ்ராத்தம், தர்ப்பண நாட்களில் குளிர்ந்தநீரில் ஸ்நானம் பண்ணவேண்டும். மிகவும் முடியாதவர்களுக்குதான் வெந்நீர் என்பது. பொதுவாக வெந்நீர் ஸ்நானம் என்பது நிஷித்தம்.

